தமிழ் அரசியல் கைதிகள் விடுத்துள்ள கோரிக்கை! - அமைச்சர் நாமல் நேரடி விஜயம்
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 11 தமிழ் அரசியல் கைதிகள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்சவை சந்திப்பதற்கான கோரிக்கையை விடுத்துள்ளனர்.
இந்த அவசர சந்திப்புக்காகக் கைதிகள் கடிதம் ஒன்றை நாமல் ராஜபக்சஷவுக்கு அனுப்பியுள்ளனர். இதனையடுத்து அமைச்சர் இன்று சிறைச்சாலைக்குச் சென்று கைதிகளின் நிலை குறித்து விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறைச்சாலைகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, அனுராதபுரம் சிறைச்சாலையில் இரண்டு தமிழ் அரசியல் கைதிகளை மண்டியிடச் செய்த சம்பவத்தை அடுத்தே இந்த சந்திப்பு இடம்பெறுகிறது.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் லொஹான் ரத்வத்தே பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது.
போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri