பொது மக்களிடம் மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்கள் விடுத்துள்ள கோரிக்கை
நாட்டின் மக்கள் பொறுமையுடனும், புத்திசாதூரியத்துடனும் செயற்பட வேண்டுமென மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
பாகிஸ்தானில் பிரியந்த குமார என்ற இலங்கையர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பீடங்களினதும் பதிவாளர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
கொலையுடன் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்படுவர் என பாகிஸ்தான் பிரதமர் அளித்துள்ள உறுதிமொழி மீது நம்பிக்கையுண்டு என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் நீண்ட காலமாக நிலவி வரும் நட்புறவும், நம்பிக்கையும் சிதைக்கப்பட்டுவிடக் கூடாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான ஓர் நிலைமையில் மக்கள் பொறுமையுடனும், மதிநுட்பத்துடனும் செயற்பட வேண்டுமெனவும், சகவாழ்வு மற்றும் சமாதானத்தை நிலைநாட்ட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர்.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்கள் நீதியை நிலைநாட்டும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.





பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
