பிரதமரிடம் சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கை
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் சர்வ கட்சிகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை மக்கள் தற்போது நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டியமை முக்கியமான விடயமாகும்.
மக்களின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ளும் வகையில் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் அமைய வேண்டும். இலங்கையிலும் சர்வதேசத்திலும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பி, நாட்டின் பொருளாதாரத்தை மாற்றக் கூடிய ஒரு ஒன்றிணைந்த அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும் எனவும் சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
May you like this Video

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
