நாட்டு மக்களிடம் மின்சக்தி அமைச்சு விடுத்துள்ள கோரிக்கை!
மின் பாவனையாளர்கள் மின்சாரத்தை சிக்கனமாகவும், உரிய முகாமைத்துவத்துடனும் பயன்படுத்த வேண்டும் என மின்சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கடந்த சில தினங்களாக இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு எமது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இ
ந்நிலையில், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என நாங்கள் பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம். இதன்படி, வீடு ஒன்றுக்கு ஒரு மின்குமிழை அணைக்க முடிந்தால் நாள் ஒன்றுக்கு 7 மில்லியன் மின் குமிழ்களை அணைக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வீட்டில் தேவையற்ற இடத்தில் ஔிரும் மின் குமிழைதான் அனைக்க வேண்டும். மின்சாரத்தை சேமிப்பது என்பது குறுகிய காலத்தில் செய்ய வேண்டிய ஒன்றல்ல.
இது ஒரு பழக்கமாக, நம் வாழ்வின் ஒரு பகுதியாக நாம் செய்ய வேண்டிய ஒன்று.
எவ்வாறாயினும், தொடர்ச்சியாக மின் விநியோகத்தை மேற்கொள்வது எமது பொறுப்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
ஜனனி சொன்ன விஷயம், குணசேகரனுக்கு எதிராக விசாலாட்சி இதை செய்வாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
பிரித்தானியாவை விட்டு வெளியேறிய 45,000 இந்திய மாணவர்கள்: எச்சரிக்கும் கல்வித்துறையினர் News Lankasri