பொலிஸ் மா அதிபரின் கோரிக்கை நிராகரித்த தேசிய பொலிஸ் ஆணையகம்
210 பொலிஸ் அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்யவேண்டும் என்ற பொலிஸ் மா அதிபரின் கோரிக்கையை தேசிய பொலிஸ் ஆணையகம் நிராகரித்துள்ளது.
இடமாற்ற கொள்கைகளுக்கு ஏற்ப உரிய பரிந்துரைகள் செய்யப்படாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுடன் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான அதிகாரிகளை இடமாற்றம் செய்வது சிறந்த நடவடிக்கை அல்ல என்று, ஆணையகம் அறிவித்துள்ளது.
தரம் தாழ்த்துதல்
எவ்வாறாயினும், ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ பரிந்துரைகளை கருத்தில் கொண்டு 24 அதிகாரிகளை இடமாற்றம் செய்ய ஆணையகம் ஒப்புதல் அளித்துள்ளது.

அத்துடன், 14 பொலிஸ் பொறுப்பதிகாரிகளை, பதவிகளில் இருந்து நீக்கி, வழக்கமான கடமைகளுக்கு தரம் தாழ்த்துவதற்கும் ஆணையகம் பரிந்துரை செய்துள்ளது.
மேலும், அவர்கள் மீது நடத்தப்படும் விசாரணையின் போது, குற்றங்கள் நிரூபிக்கப்படாவிட்டால், ஒழுங்கு நடவடிக்கையிலிருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.
அது மாத்திரமன்றி, அவர்கள் ஏற்கனவே இருந்த பதவியைப் போன்ற ஒரு பதவிக்கு நியமிக்கப்படுவார்கள். இதேவேளை, 8 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் இடமாற்ற கோரிக்கைக்கு ஆணையகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri