டிப்ளோமா பட்டதாரிகளுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்
டிப்ளோமா கற்கை நெறியினை பூர்த்தி செய்தவர்கள் எதிர்காலத்தில் ஆசிரியர் தொழிலில் ஈடுபட முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.
இந்த புதிய முறைமை தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
"எதிர்காலத்தில் அனைத்துக் கல்லூரிகளும் ஒரே பல்கலைக்கழகமாக இணைக்கப்படும். 2028ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள் இளநிலைக் கல்விப் பட்டதாரிகளாக இருப்பார்கள்.
உலகில் வேகமாக மாறிவரும் அறிவுக்கு ஏற்ப, ஆசிரியர்கள், மருத்துவர்கள் என ஒவ்வொரு தொழில் வல்லுநர்களும் தங்களது கல்வி தகைமையை மேம்படுத்த வேண்டும்.
கல்வி தரம்
அதேவேளை, ஆரம்பக் கல்வியின் அடிப்படையான அழகியல் பாடத்தை ஒருபோதும் பாடத்திட்டத்தில் இருந்து நீக்க முடியாது.
மேலும், செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழிநுட்பம் ஆகிய பாடங்களை இணைத்து பாடசாலை பாடத்திட்டம் ஆக்கப்பூர்வமாக சர்வதேச தர கல்விக்கு உயர்த்தப்படும்.
இதற்கமைய, 100 பாடசாலைகளில் முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டு, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து அந்த ஆசிரியர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்ற உரிமம் வழங்கப்படும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

வீட்டைவிட்டு கிளம்பும் முன் கோமதிக்காக மீனா செய்த காரியம், ஆனால் செந்தில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
