ஊற்றுப்புலம் குளம் தொடர்பில் விவசாயிகள் விடுத்துள்ள கோரிக்கை
கிளிநொச்சி- ஊற்றுப்புலம் குளத்தை அபிவிருத்தி செய்து நீர்த்தேக்கத்தை பாதுகாக்குமாறு விவசாயிகள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
நேற்றையதினம்(12) விவசாயிகளின் அழைப்பினை ஏற்று, ஊற்றுப்புலம் குளத்தை விவசாய அமைப்பின் தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் நேரில் பார்வையிட்ட போதே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஊற்றுப்புலம் கிராமம் வினைத்திறனான நீர்ப்பாசன முறையால் விவசாயம் நடத்தும் கிராமமாக இருந்தது. ஆனால் 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு, 300 அடி அளவுக்கு அதிகமாக குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு அதிக நீர் எடுத்தல் (Over Extraction) கலாச்சாரம் உருவாகியுள்ளது.
வறட்சி
இதன் விளைவாக, ஊற்றுப்புலம் கிராமத்தில் வறட்சி அதிகரித்து, மரங்கள் மற்றும் செடிகள் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் குறிப்பிட்டதன்படி, இது தொடர்ந்தால் ஊற்றுப்புலம் கிராமம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது, மேலும் விவசாயிகள் முழுமையாக விவசாயத்தை கைவிட வேண்டிய நிலை உருவாகும்.
கோரிக்கை
இதற்கிடையில் நீளம் = 2100 மீ அகலம் = 2000 மீ., அணைகட்டின் உயரம் = 10 அடி கொண்ட ஊற்றுப்புலம் குளத்தை அபிவிருத்தி செய்து நீர்த்தேக்கத்தை பாதுகாக்குமாறு விவசாயிகள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

ஊற்றுப்புலம் குளத்தின் பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு, விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் வாய்ப்புகளை முழுமையாக பரிசீலித்து, அதற்கேற்ற அவை விருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

