கல்கிஸ்ஸ நீதிமன்ற சம்பவம் : பிணை வழங்கப்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு அமோக வரவேற்பு
கல்கிஸ்ஸ நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணி ஒருவரை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரண்டு சரீர பிணைகள்
இந்த வழக்கை விசாரணை செய்த கல்கிஸ்ஸ நீதவான் பசன் அமரசேன, குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தருக்கு 100,000 ரூபா மதிப்பிலான இரண்டு சரீர பிணைகளின் அடிப்படையில் பிணை வழங்கியுள்ளார்.
மேலும், நீதவான் இந்த வழக்கை இணக்கம் பெறும் நோக்கில் இணக்கச் சபைக்கு (Mediation Board) அனுப்புமாறு உத்தரவிட்டார்.
வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 17 ஆம் திகதி நடைபெறும் என கல்கிஸ்ஸ நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதேவேளை, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட பிறகு குறித்த பொலிஸ் அதிகாரிக்கு நீதிமன்றத்திற்கு வெளியே அமோக வரவேற்பு வழங்கப்பட்டுள்ளன.
பொலிஸார் மீது தாக்குதல்
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
அண்மையில் கல்கிஸ்ஸ நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் சட்டத்தரணி ஒருவருக்கும் முரண்பாட்டினை ஏற்பட்டிருந்தது.
சிரேஸ்ட சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க என்பவர் மீது பொலிஸ் உத்தியோகத்தொருவர் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இன்றைய தினம் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது. கான்ஸ்டபிள் ஒருவரது பணிகளை முன்னெடுப்பதற்கு இடையூறு விளைவித்தார் எனவும் அச்சுறுத்தல் விடுத்தார் எனவும் சிரேஸ்ட சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்வதற்காக பொலிஸார் குறித்த சட்டத்தரணியை தேடி வருகின்றனர் எனினும் அவர் வீட்டில் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணி ஒருவர் தனது வாகனத்தை வெளியே எடுக்கும் போது ஏற்பட்ட முரண்பாட்டு நிலைமையே இந்த மோதலுக்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
திட்டும் காட்சிகள்
இந்த குறித்த சட்டத்தரணி கடுமையான வார்த்தைகளினால் பொலிஸ் கான்ஸ்டபிளை திட்டும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு உள்ளன.
இந்த சட்டத்தரணி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரிய சூரியவுடன் நேரடியாக தொடர்பு கொண்டு பேசுவது போன்ற காணொளிகள் வெளியிடப்பட்டிருந்தன. எவ்வாறெனினும் இந்த தகவல் பொய்யானது என பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
குறித்த சட்டத்தரணி பொலிஸ்மா அதிபருடன் குறித்த சந்தர்ப்பத்தில் நேரடியாக உரையாற்றவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த தொலைபேசி உரையாடல் மேற்கொள்ளப்பட முன்னரே பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆரம்ப தகவல்களின் படி, ஒரு வழக்கறிஞருக்கும் பொலிஸாருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தாக்குதலாக மாறியதாக சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அந்த பொலிஸார் மீது தாக்குதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம் நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே இடம்பெற்றுள்ளதையடுத்து, இலங்கை வழக்கறிஞர் சங்கம் (BASL) கடும் கண்டனம் வெளியிட்டது.
சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் இடமாக விளங்கும் நீதிமன்ற வளாகத்துக்குள் இத்தகைய சம்பவம் நிகழ்ந்தது “சட்டத்திற்கே எதிரான தாக்குதலாகும்” என சங்கம் தெரிவித்தது.
மேலும், சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரியது. சம்பவம் சமூக வலைத்தளங்களிலும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
பலரும் “நீதிமன்ற வளாகங்களில் பாதுகாப்பு மற்றும் ஒழுக்கம் கடுமையாக வலுப்படுத்தப்பட வேண்டும்” எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய சட்டதரணியின் நடவடிக்கை குறித்து பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜயபால கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு இடையூறு ஏற்படும் வகையில் சட்டத்தரணி ஒருவர் நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது.
பக்க சார்பற்ற விசாரணை
அந்த விடயம் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளார்.
சட்டத்தரணியின் அநாகரிகமான செயல் நீதிமன்றை அவமதிப்பதாகவே கருதப்பட வேண்டும் எனவும் குறித்த சட்டத்தரணிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தரணியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டு இருந்தால் அதற்காக குரல் கொடுக்க தயங்க போவதில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் தாம் இந்த விடயத்தில் தலையீடு செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பக்க சார்பற்ற விசாரணை நடத்தப்படும் என பொலிஸ் மா அதிபர் பிரியந்த விரசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நாளைய தினம் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் இந்த நடவடிக்கைக்கு சட்ட மா அதிபர் திணைக்களத்தினம் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.





இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan

பிரித்தானியாவில் வீடொன்றில் கண்டெடுக்கப்பட்ட 2 குழந்தைகளின் உடல்கள்: 43 வயது பெண் கைது News Lankasri
