தமிழ்க்கட்சிகளுக்கு வஜிர அபேவர்தன விடுத்துள்ள பகிரங்க அறிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரைப் போட்டியிட வைத்து தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கத் தமிழ்க் கட்சிகள் முயற்சிக்கக்கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன (Vajira Abeywardena) பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் மற்றும் தமிழ் பொதுவேட்பாளர்
விவகாரம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) ஜனாதிபதித் தேர்தலை உரிய நேரத்தில் நடத்தியே தீருவார். அவர் மூவின மக்களின் ஆதரவுடன் அந்தத் தேர்தலில் வெற்றியடைந்து ஜனாதிபதி பதவியில் தொடர்ந்து நீடிப்பார்.
ஜனாதிபதி தேர்தல்
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரைக் களமிறக்கத் தமிழ்க் கட்சிகள் ஆலோசிக்கின்றனர். வடக்கிலுள்ள சில தமிழ்க் கட்சிகள் தான் இதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

தமிழ் பொதுவேட்பாளராக யார் களமிறங்கினாலும் அவர் வெற்றியடையமாட்டார் என்பதை தமிழ்க் கட்சிகள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
எனினும், தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை வடக்கிலுள்ள தமிழ்க் கட்சிகள் களமிறக்கினால் அங்குள்ள மக்களின் வாக்குகள் தான் சிதறடிக்கப்படும்.
எனவே, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை போட்டியிட வைத்து தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கத் தமிழ்க்கட்சிகள் முயற்சிக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன்." என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri