நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு கோரிக்கை தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கை
பாதுகாப்பு கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவுகள் தேசிய பாதுகாப்பு சபையின் பரிசீலனைக்காக அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
ஆபத்து மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர், தங்களுக்கு பாதுகாப்பு விடயங்களுக்காக, சபாநாயகருடன் கலந்துரையாடல் ஒன்றை கோரியிருந்த நிலையில், அதற்கான நிகழ்வு அண்மையில், நாடாளுமன்றில் இடம்பெற்ற போதே, பதில் பொலிஸ் மா அதிபர் இந்த விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
குறித்த நிகழ்வின்போது, நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்தும் பதில் பொலிஸ் மா அதிபர் விளக்கமளித்தார்.
பெரும்பாலான கொலைகள்
நாட்டில் இடம்பெற்று வரும் கொலைகளில் பெரும்பாலானவை, குற்றவியல் குழுக்களுக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் இடையிலான மோதல்களின் விளைவாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் உள்ளூர் அரசியல்வாதிகள் இந்தக் குற்றங்களில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 13 மணி நேரம் முன்

சீனா, அமெரிக்காவிற்கு புதிய சிக்கல்., இந்தியாவின் நட்பு நாடுடன் பிரான்ஸ் Rafale ஒப்பந்தம் News Lankasri

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
