நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பகலுணவை இடை நிறுத்துமாறு கோரிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றத்தில் வழங்கும் பகலுணவை இடை நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆளும் தரப்பின் 53 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் எழுத்து மூலமாக இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
நாட்டு மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கும் பகலுணவை இடை நிறுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 900 நாடாளுமன்ற சேவையாளர்களுக்கான பகலுணவிற்கு மாத்திரம் பெருந்தொகை நிதி செலவிடப்படுகின்றதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பகலுணவை இடை நிறுத்துமாறு வலியுறுத்துகிறோம் என்றும் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது முழு நாளும் விவாதம் இடம்பெறும் நாட்களில் உணவகங்களின் விலைக்கமைய உணவு பொதிகளை வழங்கும் நடவடிக்கையினை முன்னெடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டுமக்கள் எதிர்க்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு இறுதி தீர்வு காணும் வரை இந்த கோரிக்கையை செயற்படுத்தமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் செய்துள்ள மாஸ் வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam