கிண்ணியா குரங்கு பாஞ்சான் குளத்தின் குளக்கட்டினை புனரமைத்து தருமாறு கோரிக்கை (video)
திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா குரங்கு பாஞ்சான் குளத்தின் குளக்கட்டு பெரிதும் சேதமடைந்து வருவதால் புனரமைத்து தருமாறு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சூறாவளி காரணமாக சேதம்
கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் ஏற்பட்ட மழை மற்றும் சூறாவளி காரணமாக குரங்கு பாஞ்சான் குளத்தின் குளக்கட்டு சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரம் இடிந்து காணப்படுவதாகவும்,அணைக்கட்டு இடிந்து வருவதாகவும் தெரிவிக்க்கின்றனர்.
குளக்கட்டினை புனரமைக்க அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதி போதாமல் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு குரங்கு பாஞ்சான் குளத்தின் பாதிப்பினால் ஜந்நூறிற்கும் மேற்பட்ட வேளாண்மை செய்கை செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியிலுள்ள விவசாய சம்மேளனங்களின் பிரதி நிதிகள் தெரிவிக்கின்றனர்.
விவசாயிகள் கோரிக்கை
குரங்கு பாஞ்சான் குளத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்த போது அவர்கள் உடனடியாக வந்து குளத்தை பார்வையிட்டு அது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு இக்குளத்தை புனரமைக்க 37 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.
இக்குளம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் ஒதுக்கீடு செய்த பணத்தை பயன்படுத்தி குறிப்பிட்ட தூரம் வரை தான் செய்ய முடியும் என நீர்பாசன திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இக்குளத்தை விவசாய திணைக்களத்தினர் இதுவரைக்கும் பகுதி பகுதியாகத்தான் புனரமைத்து வந்துள்ளார்கள்.
விவசாயிகளுக்கு முக்கிய தேவை என்பதால் அரசியல்வாதிகளோ அல்லது தனியார்
நிறுவனமோ இக்குளத்தை பூரணப்படுத்தி தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
