இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் கிழக்கு ஆளுநரிடம் கோரிக்கை விடுப்பு
இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்கள் தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதற்கு இரு நாட்டு கடற்றொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை ஒன்றை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) ஏற்பாடு செய்ய வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா கோரிக்கை விடுத்துள்ளார்.
கடற்றொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பில் நேற்று (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
நாம் இந்தக் கோரிக்கையை முன்வைப்பதற்கு காரணம் இந்தியாவிலிருந்து வருகை தருகின்ற இராஜதந்திர அதிகாரிகளாக இருந்தாலும் சரி ஏனைய உயர் அதிகாரிகளாக இருந்தாலும் அவர்களை வரவேற்பதிலும் தொடர்ந்து தொடர்புகளை பேணுவதிலும் செந்தில் தொண்டமான் சிறப்பாகச் செயற்படுகின்றார்.
அந்த அடிப்படையிலேயேதான் நாங்கள் கிழக்கு மாகாண ஆளுநரை வடக்கு மாகாண கடற்றொழில் சங்கம் சார்பாக சந்திப்பதற்கு நேரத்தை வழங்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
அதேபோன்று இலங்கை - இந்திய பேச்சுவார்த்தையை தமிழ் நாட்டோடு மத்திய அரசோடு செந்தில் தொண்டமான் தலைமையிலேயே முன்னெடுப்பதற்கு வடக்கு கடற்றொழில் சமூகமாகிய நாம் தயாராக இருக்கின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |