வடக்கு மாகாண மக்களை அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை!
தற்பொழுதுள்ள கோவிட் பரவலின் மத்தியில் வடமாகாண மக்களை அவதானமாகச் செயற்படுமாறு வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,
இலங்கையினுடைய இறப்பு விகிதம் 2.4 விகிதமாகக் காணப்படுகின்ற நிலையில், வட மாகாணத்தில் கோவிட் தொற்றின் மூலம் இறப்பவர்கள் 1.95 விகிதமாகக் காணப்படுகின்றது.
குறிப்பாக ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் வடமாகாணத்திற்குட்பட்ட மாவட்டங்களின் இறப்பினை கருத்திற்கொண்டு மக்கள் உரிய சுகாதார வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் வடமாகாணத்திலுள்ள பிரதேச வைத்தியசாலைகளில் கோவிட் தொற்றுக்கு மத்தியில் நோயாளர் மீது கவனம் செலுத்துதல் குறைவாகக் காணப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இது தொடர்பாகக் கேட்டபோது இவ்வாறான முறைப்பாடுகள் தனக்கு கிடைக்கவில்லை எனவும் அவ்வாறு முறைப்பாடு கிடைக்கப்பெறின் தான் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
Bigg Boss: கதவை திறக்க பிக்பாஸிடம் கூறிய பிரஜன்... பரிதாப நிலையில் விக்ரம்! வெடிக்கும் சண்டை Manithan
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri