என் கணவரை கொன்றவர்களை தூக்கிலிடுங்கள்:றம்புக்கனை சம்பவத்தில் உயிரிழந்தவரின் மனைவி கோரிக்கை
றம்புக்கனை சம்பவத்தில் என் கணவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற பொலிஸாரை தூக்கிலிட்டு கொள்ளுங்கள்.என் கணவருக்கு நீதி கிடைக்கும் வரை நான் ஓயமாட்டேன் என றம்புக்கனை சம்பவத்தில் உயிரிழந்த சாமிந்த லக்ஷானின் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
எனது கணவர் மீது பொலிஸார் பல்வேறு குற்றங்களை சுமத்த முயற்சிக்கின்றனர்.அவரை சுட்டுக்கொன்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், அதுவரை போராடுவேன்.இதை விடமாட்டேன்.என் கணவர் மீதும் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இப்போது பள்ளிக்கு செல்ல முடியாது என்று என் பிள்ளைகள் கூறுகின்றனர். எனக்கு தந்தை இல்லை, நான் என் கணவரை இழந்துவிட்டேன்.இதற்கு காரணமானவர்களை தூக்கிலிட வேண்டும்.என் கணவருக்கு நீதி வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்....
முப்படையினரின் பலத்த பாதுகாப்புடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ள சாமிந்த லக்ஷானின் உடல்
றம்புக்கனை சம்பவம்: சாமிந்த எவ்வாறு கொலை செய்யப்பட்டார்! நேரடி சாட்சியம் வெளியானது