இலங்கை பெற்றோலிய தனியார் பவுசர் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை
வரையறுக்கப்பட்ட, இலங்கை பெற்றோலியம் சேமிப்பு முனைய லிமிடெட் மற்றும் இலங்கை பெற்றோலியம் கோர்பரேஷன் (சிபெட்கோ) ஆகியவற்றின் போக்குவரத்து சூத்திரத்தை மாற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால், கடமையில் இருந்து விலகியிருக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலிய தனியார் பவுசர் தாங்கி (டேங்கர்)உரிமையாளர்கள் சங்கம் இதனை இன்று தெரிவித்துள்ளது.
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுடன் போக்குவரத்து சூத்திரத்தைப் புதுப்பிக்க ஏற்கனவே கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலின் படி, இது தொடர்பாக கடந்த ஏப்ரல் 27 மற்றும் ஜூன் 14 ஆகிய திகதிகளில் பல கடிதங்கள் அனுப்பப்பட்டன.
இந்தநிலையில் அண்மையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதன் மூலம், 2021, ஜூன் 11 நள்ளிரவு முதல் டீசல் 7 ரூபாவால் உயர்த்தப்பட்டது.
இதன் காரணமாக டேங்கர் உரிமையாளர்கள், ஒரு கி.மீ.க்கு கூடுதல் செலவை ஏற்க வேண்டியேற்பட்டுள்ளது.
எனவே அதற்கு அமைய இந்த
வாரத்துக்குள் தமக்கான செலவுத்தொகை அதிகரிக்கப்பட வேண்டும். இல்லையேல்
கடமைகளில் இருந்து விலகியிருக்கப் போவதாக பெற்றோலிய தனியார் தாங்கி
(டேங்கர்)உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.





உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
