யாழில் அச்சுறுத்தல் விடுத்த கும்பல்! ஜனாதிபதி செயலகத்தின் கவனத்திற்கு சென்ற விடயம்
யாழில் ஊடகமொன்றின் தலைமையகத்துக்குள் புகுந்து குழுவொன்று அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ சபை ஒன்றின் போதகர் தலைமையிலான குழு ஒன்று யாழில் ஊடகமொன்றின் தலைமையகத்துக்குள் நேற்று (09.04.2023) புகுந்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளது.
அச்சுறுத்தும் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும்
இந்தச் சம்பவம் தொடர்பில் குறித்த ஊடக நிறுவனத்தால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் இதனையடுத்து இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்துக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதன்போது ஊடகங்களை அச்சுறுத்தும் இவ்வாறான செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி செயலகத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் விரைவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கவனத்துக்கு கொண்டு
செல்லப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி
செயலாளர் சமன் எக்கநாயக்கவால், பாதிக்கப்பட்ட ஊடகத்தின் நிர்வாக இயக்குநருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
