யாழ். மாவட்ட அரச அதிபர் விடுத்துள்ள கோரிக்கை!
யாழ்.மாவட்ட செயலகத்துக்கு அருகாமையில் உள்ள கால்வாய்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனின் வேண்டுகோளுக்கு இணங்க வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஊழியர்களால் இன்றையதினம் (4) இந்த சுத்தப்படுத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த கால்வாயில் ஏராளமான பிளாஸ்டிக் போத்தல்கள், கழிவுப் பொருட்கள் என்பன காணப்பட்டதால் கழிவுநீர் ஓடுவதில் தடை ஏற்பட்டது.
கோரிக்கை
இந்நிலையில் அந்த கழிவுப் பொருட்கள் அகற்றப்பட்டன. தண்ணீர் குடித்த பின்னர் வெற்றுப் போத்தில்களையோ, ஏனைய கழிவுப் பொருட்களையோ கால்வாயினுள் வீசுவதால் தண்ணீர் ஓடுவதில் சிக்கல் காணப்படுகிறது.
இதனால் தண்ணீர் ஓடாமல் தேங்கி நிற்பதால் நுளம்பு பெருகி டெங்கு போன்ற அபாயகரமான நோய்கள் பரவும் அபாயம் காணப்படுகின்றது.
எனவே மக்கள் இது குறித்து விழிப்புணர்வுடனும், பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டும் என மருதலிங்கம் பிரதீபன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் மாலை - திருவிழா



