இளைஞர்களை தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு நியமிக்குமாறு கோரிக்கை
சர்வகட்சி அரசாங்கம் அமைவதற்கு இதுவே சிறந்த சந்தர்ப்பம் என்பதால், அண்மைய போராட்ட களத்தில் பங்கேற்ற ஐந்து இளைஞர்களை தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன விடுத்துள்ளார்.
கெமுனு விஜேரத்னவின் கோரிக்கை

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,“நாட்டை மீட்டெடுக்கும் முயற்சியில் பங்கேற்ற இளைஞர்கள் தங்களது புதிய யோசனைகளுடன் நாடாளுமன்றத்தில் பிரவேசிக்க வேண்டும்.
எனவே, அதிக வயதான அமைச்சர்களை நாடாளுமன்ற ஆசனங்களில் இருந்து நீக்குமாறும் அல்லது அவர்களின் சொந்த விருப்பத்தின் பேரில், இளைஞர்களை நியமிக்க வேண்டும்.
விகிதாசார வாக்களிப்பு முறை

மேலும் விகிதாசார வாக்களிப்பு முறையில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டாலும் இளைஞர்கள் ஒருபோதும் நாடாளுமன்றத்திற்கு தெரிவாக முடியாது. தற்போதைய விகிதாசார வாக்குப்பதிவு முறையின் கீழ், அதே பழைய போத்தலை கழுவிய பின் புதிய மதுவை நிரப்ப அரசாங்கம் முயற்சிக்கலாம்.
எனவே விட்டுக்கொடுப்பின் மூலம் நாடாளுமன்றத்தில் உள்ள அதிக வயதான அமைச்சர்கள்
நாட்டின் எதிர்கால பயணத்தில், நாட்டின் நன்மைக்காக பங்களிக்க வேண்டும்.”என்று
தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri