அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு மாவட்ட மேலதிக பதிவாளரை நியமிக்குமாறு கோரிக்கை
அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு மாவட்ட மேலதிக பதிவாளரை நியமிக்கக் கோரி அட்டாளைச்சேனையில் இருந்து பல பொது அமைப்புக்கள் ஜனாதிபதிக்கு மனு ஒன்று அனுப்பி வைத்துள்ளன.
அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பொது நிர்வாக உள்நாட்டமைச்சின் சுற்று நிருபம் மற்றும் அரசாங்க தாபனக் கோவை சட்டத்தின் பிரதிகளை இணைத்து கல்முனை காணிப் பதிவகத்தில் தொடர்ச்சியாக 7 வருடங்களை கடந்தும் J.M.பைறூஸ் கடமையாற்றுவதில் இருந்து விடுவித்து அவரை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு இடம் மாற்றம் செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பகுதியில் கடந்த 1 1/2 வருடங்களாக மேலதிக மாவட்ட பதிவாளர் பதவி வெற்றிடமாகவுள்ளது.
அட்டாளைச்சேனை பிரதேசம் என்பது தீகவாபி,பாலமுனை,திராய்க்கேணி,ஒலுவில் அட்டாளைச்சேனை ஆகிய 5 கிராமங்களை கொண்ட சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசமாகும்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் கடந்த 1 1/2 வருடங்களாக மேலதிக மாவட்ட பதிவாளர் இன்மையால் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும் மாவட்ட மேலதிக பதிவாளர் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் பதில் கடமையாற்றி வருகின்றார்.
நாடு தற்போது மிகப்பெரிய நிதி மற்றும் பொருளாதார பிரச்சினையில் சிக்கித் தவித்து வருகின்றது. இந்த நிலையில் நாடு முழுவதும் இருந்து மக்கள் வெளிநாடுகளுக்கு படையெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் மக்கள் தங்களது பிறப்பு பதிவுகள் பெறுவதில் நாளாந்தம் பெரும் சிரமம் அடைந்து வருகின்றார்கள்.
வாரத்தில் 2 நாட்கள் மேலதிக கடமையாக ஆலையடி வேம்பு மேலதிக மாவட்ட பதிவாளர் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் பதில் கடமையாக கடமையாற்றி வருவதால் மக்கள் தங்களது பிறப்பு பதிவுகள் மற்றும் கடவு சீட்டுக்கள் பெறுவதில் மற்றும் மக்கள் தங்களது வெளிநாட்டுப் பயணத்தில் கால தாமதம் அடைந்து வருகின்றார்கள்.
மக்கள் தங்களது பிறப்பு பதிவுகள் மற்றும் கடவு சீட்டுக்கள் பெறுவதிலுள்ள சிரமங்களை அரசாங்கம் சரி செய்து சீராக்கினால் தான் தாங்கள் எதிர்பார்க்கும் டொலர் நாட்டுக்குள் வந்து சேரும்.
கல்முனை காணிப் பதிவாளர் அலுவலகம் கல்முனை மாவட்ட காணி பதிவாளர் அலுவலகத்தில் 2 முஸ்லிம் மேலதிக மாவட்ட பதிவாளர் மற்றும் ஒரு தமிழ் மேலதிக மாவட்ட பதிவாளர் என்று 3 மேலதிக மாவட்ட பதிவாளர்கள் கடமையாற்றி வருகின்றார்கள்.
கல்முனை மாவட்ட காணி பதிவாளர் அலுவலகத்தை பொறுத்தமட்டில் ஒரு மாவட்ட காணி பதிவாளரே அங்கு போதுமானது. காரணம் மாவட்ட காணிப் பதிவாளர்/ மேலதிக மாவட்ட பதிவாளர் என்பவர் ஆவணங்களில் கையொப்பம் இடுவது மட்டுமே இவர்களின் கடமையாக இருந்து வருகின்றது.
இந்நிலையில் அங்கு மேலும் 1 முஸ்லிம் பதிவாளர் மற்றும் ஒரு தமிழ் பதிவாளர் என்று 3 மாவட்ட பதிவாளர்கள் கடமையாற்றி வருகின்றார்கள். அதாவது கல்முனை காணிப் பதிவகத்தில் அலுவலக பொறுப்பாளராக / மாவட்ட காணிப் பதிவாளர் நிரந்தரமாக உள்ளார்.
அத்துடன் தேவைக்கு அதிகமாக தமிழர் ஒருவர் மற்றும் முஸ்லிம் ஒருவர் என்று 2 காணிப் பதிவாளர் /மாவட்ட பதிவாளர்கள் அங்கு கடமையாற்றி வருகின்றார்கள்.
அதிலும் குறிப்பிடும்படியாக முஸ்லிம் ஒருவர் தேவைக்கு அதிகமாக மேலதிகமாக உள்ளார். கல்முனை காணிப் பதிவகத்தை பொறுத்தமட்டில் பதவியில் உள்ளவர் மிக நீண்ட காலங்களாக பொது நிர்வாக உள்நாட்டமைச்சின் சுற்று நிருபத்திற்கு விரோதமாகவும் அரசாங்க தாபனக் கோவை சட்டத்திற்கு முரணாகவும் 5 வருடங்களைக் கடந்து 7 வருடங்களுக்கும் அதிகமாக எவ்விதமான இடமாற்றமும் இல்லாது கல்முனை காணிப் பதிவகத்தில் தொடர்ச்சியாக கடமையாற்றுவது என்பது அரசாங்க சுற்று நிருபத்திற்கு விரோதமாகவும்.
அரசாங்க தாபனக் கோவை சட்டத்திற்கு முரணாகவும் உள்ளது. பொது நிர்வாக உள்நாட்டமைச்சின் சுற்று நிருபம் gPvy/ 4/ 2004 “ஸ்தானமாறு” என்னும் சுற்று நிருபம் மற்றும் பொது நிர்வாக உள்நாட்டமைச்சின் சுற்று நிருபம் 02/2004 ஆகிய 2 சுற்று நிருபங்கள் மற்றும் அரசாங்க தாபனக் கோவையின் சட்டத்தின் படி ஒரு அரச ஊழியர் தொடர்ச்சியாக 5 வருடங்கள் ஒரே அலுவலகத்தில் கடமையாற்றுவாரானால் அவர் அந்த அலுவலகத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்று குறித்த 2 சுற்று நிருபம் மற்றும் அரசாங்க தாபனக் கோவை மிகத்தெளிவாக குறிப்பிட்டுச் சொல்லுகின்றது.
நாடு தற்போது மிகப்பெரிய நிதி மற்றும் பொருளாதாரப் பிரச்சினையில் தவித்து வரும் நிலையில் அரசாங்க செலவுகளை அரசு குறைத்து வருகின்றது.
இந்நிலையில் நாடு முழுவதும் இருந்து அரச காரியாலயங்களில் தேவைக்கு அதிகமாக மேலதிக அதிகாரிகளை குறைக்க வேண்டும் என்று அரசு திட்டமிட்டுள்ள நிலையில் சிலர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும்.
அரசாங்க நிதிகள் வீண்விரயம் செய்யப்படுவது இனிமேலாவது தடுக்கபட வேண்டும். அத்துடன் மக்களின் சிரமங்கள் தீர்க்கப்பட வேண்டும். கல்முனை காணிப் பதிவகத்தைப் பொறுத்த மட்டில் 2 பதிவாளர்கள் தேவைக்கு மிக அதிக மேலதிகமாகும். அதனால் அங்கு தமிழர் ஒருவர் மற்றும் முஸ்லிம் ஒருவர் போதுமானது.
குறித்த நபர் அட்டாளைச்சேனை பிறப்பிடமாகக் கொண்டவர். அதனால் இவர் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் மேலதிக மாவட்ட பதிவாளராக கடமையாற்றுவதில் எவ்விதமான சிக்கலும் இருக்காது.
அத்துடன் அட்டாளைச்சேனை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பதால் இவருக்கு எவ்விதமான எரிபொருட்கள் பிரச்சினையோ மற்றும் போக்குவரத்துப் பிரச்சினையோ இருக்காது .
அதனால் பொது நிர்வாக உள்நாட்டமைச்சின் சுற்று நிருபம் மற்றும் அரசாங்க தாபனக் கோவை சட்டத்தை அமுல்படுத்தி கல்முனை காணிப் பதிவகத்தில் தொடர்ச்சியாக 7 வருடங்களை கடந்தும் நபரை கடமையாற்றுவதில் இருந்து விடுவித்து அவரை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு மாவட்ட மேலதிக பதிவாளரை நியமிக்கத் தேவையான நடவடிக்கைளை செய்து தருமாறு பொறுப்பு வாய்ந்த ஊடகவியாளர்/ அரசியல் விமர்சகர் மற்றும் அரசியல் ஆய்வாளர் என்ற அடிப்படையில் எனது கோரிக்கையை விடுக்கிறேன் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவின் பிரதிகள் பதிவாளர் நாயகம் அபேவர்தன ,பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குனவர்தன, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி. ஜனாதிபதின் செயலாளர் காமினி செடார சேனாரத் ஆகியோர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இக்கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றில் கேள்வி நேரத்தில் கேள்வி கேட்பதற்காக நாடாளுமன்றை உறுப்பினர் சாணக்கியனுக்கும் பிரதி ஒன்று அனுப்பி வைக்கபட்டுள்ளது.