அரசாங்கம் எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகளை அடக்குமுறைக்கு உட்படுத்த முயற்சிக்கின்றது! - நளின் பண்டார
தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகளை அடக்குமுறைக்கு உட்படுத்த முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையைப் பயன்படுத்தி மக்கள் பிரதிநிதிகளை மௌனிக்கச் செய்ய முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிவில் உரிமைகளை முடக்குவதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்கின்றது.
தற்போதைய அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்களுக்கு எதிரான வழக்குகள் மற்றும் குற்றச்சாட்டுக்களிலிருந்து மீட்பதற்கான முயற்சியாகவே இந்த அரசியல் பழிவாங்கல்கள் குறித்த ஜனாதிபதி விசாரணைக்குழு அறிக்கையை நோக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri