ஐஸ்லாந்து நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது
ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் கடந்த 25 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெற்றதுடன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. தேர்தல் முடிவுகளுக்கு அமைய எவருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் ஐஸ்லாந்து நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது என அந்நாட்டு தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஐஸ்லாந்து நாடாளுமன்றம் “எல்தின்” பிரதிநிதிகள் சபை என அழைக்கப்படுகிறது. 65 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் கடந்த 25 ஆம் திகதி நடைபெற்றது. இதில் 30 ஆசனங்களை பெண்கள் கைப்பற்றியுள்ளமை விசேடமாக கருதப்படுகிறது. இது 100க்கு 48 வீதமாகும்.
வட அத்திலாந்திக் சமுத்திரத்தில் அமைந்துள்ள ஐஸ்லாந்து ஒரு தீவு நாடாகும். அங்கு மூன்று லட்சத்து 71 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
84 நாட்கள் பிக்பாஸ் 9 வீட்டில் விளையாடியதற்காக கனி வாங்கிய சம்பளம்... எத்தனை லட்சம் தெரியுமா? Cineulagam
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri