ஈஸ்டர் தாக்குதல் குறித்த இரண்டு அறிக்கைகள் கையளிப்பு: மல்கம் ரஞ்சித் தகவல்
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு கடந்த அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் 2 அறிக்கைகள் தம்மிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்த அறிக்கைகளில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதே பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன எனவும் மேலும் இரண்டு பரிந்துரைகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரு பரிந்துரைகள்
தற்போதைய அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகிக்கும் இரண்டு அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கைகள் ஒவ்வொரு அரசாங்கத்தின் அரசியல் ஆதாயத்துக்காகவே தயாரிக்கப்பட்டுள்ளன என்று அந்தப் பரிந்துரைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக பேராயர் கூறியுள்ளார்.
அதில் எதனையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தற்போதைய ஜனாதிபதி இது தொடர்பில் பக்கச்சார்பற்ற நீதியான விசாரணையை மேற்கொள்வார் என , அதற்காக கண்களை திறந்து காத்திருப்பதாகவும் பேராயர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
