தமிழ் மக்களின் தியாகத்திற்கான விடுதலை இன்றுவரை கிடைக்கவில்லை: சபா குகதாஸ் ஆதங்கம்
ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தில் ஆயுதப் போராட்டம் நடைபெற்ற சமநேரத்தில் அகிம்சை வழியிலும் இந்திய மத்திய அரசாங்கத்தை நோக்கி சில கோரிக்கைகளை வைத்து கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் அன்னை பூபதி அவர்களும் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் தியாகி திலீபன் அவர்களும் உண்ணா நோன்பு இருந்து போராடினார்கள் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
“ இவர்கள் இறுதியில் தங்கள் உயிரை தியாகம் செய்தார்கள்.
ஆயுதப் போராட்டத் தலைவர்கள்
ஆனால் இன்று வரை தமிழ் மக்கள் இவர்களின் தியாகத்திற்கான விடுதலை பெற்றிடவில்லை.
மதவாத தலைவர்களும் ஆயுதப் போராட்டத் தலைவர்களும் இந்திய அரசையே நம்பினர்.
இன்றும் நம்புகின்றனர். அன்னை பூபதி போன்ற அகிம்சைப் போராட்ட தியாகிகளும் இந்தியாவை நம்பினர். கிடைத்தது அவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் ஏமாற்றமே.
36 ஆண்டுகள் கடந்தும் அகிச்சைக் கோரிக்கைகளுக்கும் தமிழ் மக்களின் ஐனநாயக அபிலாசைகளுக்கும் இந்திய மத்திய அரசாங்கம் நியாயமான நீதியை பெற்றுத் தரும் என்ற எதிர்பார்ப்புடன் நினைவேந்தல்களில் தங்கள் மன எண்ணங்களை வெளிப்படுத்துகின்றனர். என்று குறிப்பிடப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |