மே தின கூட்டங்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!
இந்த ஆண்டு மே தினக் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்காக அரசியல் கட்சிகள் சுமார் இருநூறு கோடி ரூபாய் செலவழித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பணவீக்க சூழல்
பணவீக்க சூழல் காரணமாக, வரலாற்றில் அதிக பணத்தை செலவழித்து மே தின பேரணிகளை ஏற்பாடு செய்ய நேர்ந்ததாக அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மே தின கூட்டங்களுக்கு மக்களை அழைத்து வருவதற்கான போக்குவரத்து செலவுகளுக்காக அரசியல் கட்சிகள் இம்முறை அதிக பணத்தைச் செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மீதிப் பணம் மேடை அமைப்பது, ஒலிபெருக்கி, விளக்குகள் அமைத்தல், கூட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளை அலங்கரித்தல், கட்சிக்காரர்களுக்கு உணவு, பானங்கள் வழங்குதல் போன்றவற்றுக்குச் செலவிடப்பட்டுள்ளது.
செலவு
இதேவேளை தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டங்கள் நான்கு மாவட்டங்களில் நடைபெற்றதால் செலவு அதிகரித்துள்ளதாக அக்கட்சியின் உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மேடை, ஒலிபெருக்கிகள், விளக்கு அமைப்புகள் மற்றும் சில சிறு விளம்பரச் செயற்பாடுகளுக்கான செலவுகளை மாத்திரமே கட்சித் தலைமையகம் செலவு செய்தது எனவும் ஏனைய அனைத்துச் செலவுகளையும் மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டாக செலவு செய்தனர் எனவும் கூறியுள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
