முகநூல் விளம்பரத்தினை நம்பி வேலைக்கு சென்ற இளம்யுவதிக்கு காத்திருந்த அதிர்ச்சி
முகப்புத்தக விளம்பரத்தினை நம்பி மசாஜ் நிலையமொன்றிற்கு வேலைக்கு வந்த இளம் யுவதி ஒருவர் தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
கடந்த (01) தொழிலாளர் தினத்தன்று மாத்தறை, தலரம்ப பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
மாத்தறை பகுதியில் உள்ள மசாஜ் நிலையமொன்றில் வேலை வாய்ப்பு உள்ளதாக முகப்புத்தகத்தில் காணப்பட்ட விளம்பரத்தினை நம்பி யுவதி மசாஜ் நிலையத்திற்கு வந்த போது மேலாளரால் துன்புறுத்தப்பட்டு தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பொலிஸில் முறைப்பாடு
குறித்த யுவதி மேலாளருக்கு பயந்து பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை எனவும், முகாமையாளர் அவரை வெளியில் செல்லவிடாமல் அங்கேயே பூட்டி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில் தலரம்ப பகுதிக்கு சென்று மசாஜ் மையத்தை சுற்றி வளைத்த பொலிஸார் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
இதன்போது மசாஜ் நிலைய உரிமையாளர் போல் நடித்து யுவதியுடன் சென்றவர் உண்மையான உரிமையாளர் இல்லை எனவும் யுவதி அங்கு அடையாளம் காட்டியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் யுவதியின் தலை, கால், கழுத்தில் காயங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் கடந்த 17 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை யுவதியை பலமுறை தகாதமுறைக்கு உட்படுத்தி பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுமாறு அடித்து துன்புறுத்தியுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
யுவதி மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதி
இதனைத்தொடர்ந்து யுவதியை மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக பொலிஸார் அனுமதித்துள்ளனர்.
மேலும், மசாஜ் நிலைய முகாமையாளரை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு கூறியிருந்த நிலையில், நேற்றைய நிலவரப்படி சந்தேகநபர் பொலிஸ் நிலையத்திற்கு வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகநூல் விளம்பரங்களில் சிக்கி இளைஞர்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் வழக்கு அதிகம் என்பதுடன், பெரியவர்கள் இது தொடர்பில் கவனமாக இருக்க வேண்டும் எனவும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்கவின் பணிப்புரைக்கமைய மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் நிலைய பொறுப்பதிகாரி வருணி போகஹவத்த உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
