பொலிஸார் மக்களுடன் பொறுமையாக நடக்க வேண்டும்! சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை
சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை
பொதுமக்களுடன் பொறுமையாக நடந்து கொள்ள பொலிஸார் பழகிக் கொள்ள வேண்டுமென்று சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களை மையப்படுத்தி அண்மைக்காலமாக அதிகரித்து வரும் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் மோதல்கள் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும்
பொதுமக்களைப் போலவே தற்போதைய நிலையில் பொலிஸாரும் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு மன அழுத்தங்களுடன் உள்ளதை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்றுக் கொள்கின்றது.
எனினும் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கும் உத்தியோகத்தர்கள் என்ற வகையில் பொலிஸார் தொடர்ந்தும் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்று சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்திக் கொள்ள விரும்புகின்றது.

அதே போன்று பொதுமக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைத் தணித்து அவர்களின் சிரமங்களைப் போக்கும் வகையில் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எமது சங்கம் அரசாங்கத்தையும் வலியுறுத்திக் கொள்கின்றது என்று சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri