எரிசக்தி அமைச்சரின் புதிய அறிவிப்பு
எரிசக்தி துறையின் சீர்திருத்தங்கள் தொடர்பாக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழு தயாரித்த அறிக்கை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையை ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையிடம் கையளிக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நவம்பர் மாதத்துக்குள் சீர்திருத்தங்கள் சமர்ப்பிக்க எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
மின் உற்பத்தி திட்டங்கள்
தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவிலே எரிசக்தி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
I have received the Report prepared by the Cabinet Appointed Committee On Power Sector Reforms. I will handover the Report to the President & the Cabinet of Ministers. Hope to present the reforms to Parliament by November. I thank the members of the Committee for their services.
— Kanchana Wijesekera (@kanchana_wij) October 22, 2022
இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை மற்றும் இலங்கை மின்சார சபையினால் முன்னெடுக்கப்படவுள்ள பல்வேறு மின் உற்பத்தி திட்டங்களுக்கான யோசனைகள் குறித்தும் தேசிய சபைக்கு விளக்கமளிக்கப்படவுள்ளதாக அமைச்சர் தேசிய சபைக்கு அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri
