ஐக்கிய மக்கள் சக்தியின் மறுசீரமைப்பு நடவடிக்கை விரைவில்
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் மறுசீரமைப்பு நடவடிக்கை இந்த மாதத்திலிருந்து ஆரம்பமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும், கட்சித் தலைமைப் பதவியில் மாற்றம் வராது எனவும் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
ஐக்கிய மக்கள் சக்தி
"ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய அரசியல் வேலைத்திட்டம் இந்த மாதத்திலிருந்து முன்னெடுக்கப்படும்.
கட்சியின் விசேட கூட்டமும் நடத்தப்படும். கட்சி மறுசீரமைப்புப் பணியும் ஆரம்பமாகும். சில பதவிகளில் மாற்றம் வரும். அது மக்கள் எதிர்பார்க்கும் மாற்றமாக இருக்கும்.
மேலும், கட்சித் தலைமைப் பதவியில் மாற்றம் வராது. ஆனால், தனக்குள்ள பலவீனங்களை இனங்கண்டு அவற்றைச் சரி செய்வதற்குரிய நடவடிக்கையில் கட்சித் தலைவர் ஈடுபட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |