மக்கள் எதிர்ப்பையடுத்து சுழிபுரத்தில் அகற்றப்பட்ட புத்தர் சிலை
சுழிபுரத்தில் புத்தர் சிலை அகற்றப்பட்டதால் போராட்டம் கைவிடப்படுகின்றதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் அறிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் புத்தர் சிலை வைத்ததால் அதனை அகற்றுமாறு கோரி நாளையதினம் போராட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
விடிவுவரை போராடுவோம்
இந்நிலையில் சுழிபுரத்தில் புத்தர் சிலை அகற்றப்பட்டதால் போராட்டம் கைவிடப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “போராடினால் மட்டுமே இனம் வாழும். போராட்டங்களால் எதையும் சாதிக்க
முடியாதென்பவர்கள், இனியாவது எம்மோடு கைகோர்ப்பார்கள் என்று நம்புகின்றோம்.
இனத்துக்காக இறுதிவரை, விடிவுவரை போராடுவோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலதிக தகவல் - கஜி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
