யாழ். சுழிபுரம் புத்தர் சிலை விவகாரம் - நாளை எதிர்ப்புப் போராட்டம்
சுழிபுரம் - சவுக்கடியில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெறவுள்ள போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் அழைப்பு விடுத்துள்ளார்.
அவரால் இன்று (07.03.2024) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “சுழிபுரத்தில் கடற்படையினரால் சவுக்கடிப் பிள்ளையார் கோயிலடியில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
போராட்டத்திற்கு ஆதரவு
குறித்த புத்தர் சிலையை அகற்றக்கோரி, நாளை வெள்ளிக்கிழமை மு.ப 10.30 மணிக்கு எதிர்ப்புப் போராட்டம் ஒன்று சவுக்கடிப் பிள்ளையார் கோயில் முன்பாக நடைபெறவுள்ளது.

எனவே, அனைவரும் திரண்டு பேராதரவு தருமாறு அன்புரிமையோடு வேண்டுகின்றோம்” என்றுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
எப்ஸ்டீன் கோப்புகளில் அறிவியலாளரின் முகம் சுழிக்கும் புகைப்படம்: கோபத்துடன் விளக்கமளித்த குடும்பம் News Lankasri