கொழும்பில் மாநகரசபையின் அதிரடி நடவடிக்கை - இடித்து தள்ளப்படும் அனுமதியற்ற கட்டுமானங்கள்
கொழும்பு நகரின் வடிகால் கட்டமைப்பிற்குத் தடையாக இருக்கும் அனுமதியற்ற கட்டுமானங்களை கண்டறிந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றதாக கொழும்பு மாநகர மேயர் அறிவித்துள்ளார்.
கொழும்பு முழுவதும் வடிகால் வசதிகளை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு இத்தகைய கட்டுமானங்கள் பெரும் சவாலாக உள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
நீர் வழிந்தோட இடையூறு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அனுமதியற்ற கட்டுமானங்கள் நீரின் சீரான ஓட்டத்தைத் தடுப்பதுடன், வடிகால் வாய்க்கால்களைச் சுத்தம் செய்வதற்கும் பராமரிப்பதற்கும் இடையூறாக அமைகின்றன.
நகரின் வடிகால் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் பணியின் ஒரு பகுதியாக, இத்தகைய தடைகளைக் கண்டறிந்து அகற்றும் நடவடிக்கைகளை கொழும்பு மாநகர சபை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்றுள்ளார்.

அனுமதியற்ற கட்டுமானங்கள்
இதற்கிடையில், தங்கள் சொத்துகளில் இருந்த அனுமதியற்ற கட்டுமானங்களை தாமாக முன்வந்து அகற்றிய சில வீட்டு உரிமையாளர்கள் மற்றும் நிறுவனங்களின் முடிவை மேயர் வரவேற்றார்.
அவர்களின் ஒத்துழைப்பைப் பாராட்டிய அவர், மேலும் பல குடியிருப்பாளர்களும் வணிக நிறுவனங்களும் இவர்களைப் பின்பற்றி, கொழும்பின் வடிகால் கட்டமைப்பை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பார்கள் என்று நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.