இரண்டு அமைச்சர்களை நீக்கியதால் நாட்டின் பிரச்சினைகள் முடிந்து விடாது
இரண்டு அமைச்சர்களை பதவி நீக்கியதன் மூலம் நாடு எதிர்நோக்கி இருக்கும் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர முடியாது எனவும் அந்த பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமாயின் அரசாங்கம் வீட்டுக்கு செல்ல வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டில் தற்போது வரிசைகளில் நிற்கும் மக்கள் அரசாங்கத்தை வீட்டுக்கு செல்லுமாறே கோருகின்றனர். நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக விமல் வீரவங்சவும் உதய கம்மன்பிலவும் பதவிகளில் இருந்து நீக்கப்படவில்லை.
அரசாங்கத்திற்குள் இருக்கும் பிரச்சினைகளை முடிவுக்கொண்டு வருவதற்காகவே அவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். அரசாங்கம் தனது இயலாமையை ஏற்கனவே காட்டி விட்டது.
ஏழு மணி நேரம் மின்சாரத்தை துண்டிக்கும் முடிவை எடுத்த அமைச்சர் தற்போது, நாட்டின் எரிசக்தி அமைச்சராக பொறுப்பற்றுள்ளார். மின்சக்தியை பொறுப்பேற்றுள்ள பெண் அமைச்சர் கொரோனா காலத்தில் செய்தவை இன்னும் நினைவில் இருக்கின்றது எனவும் அலவத்துவல குறிப்பிட்டுள்ளார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 1 மணி நேரம் முன்
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam