யாழ்.பொது நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டு 45 ஆண்டுகள்..!
யாழ்ப்பாணம் பொது நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டு 45 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, இன்றைய தினம்(1) யாழ்ப்பாணப் பொது நூலகத்தில், நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது யாழ்ப்பாணப் பொது நூலக ஸ்தாபகர் கே. எம். செல்லப்பா மற்றும் யாழ்ப்பாணப் பொது நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்ட அதிர்ச்சியிலும் வேதனையிலும் உயிரிழந்த அருட்கலாநிதி H.S. தாவீது அடிகள் ஆகியோரின் உருவப்படத்திற்கு மலர் தூபி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் பொது நூலகம்
தொடர்ந்து 45 ஆண்டுகள் நிறைவடைவதை குறிப்பிடும் வகையில் 45 விளக்குகள் ஏற்றப்பட்டது.

மாநகர சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் டி. சி. அரவிந்தராஜ், யாழ்ப்பாண மாநகர சபையின் பிரதி முதல்வர் இ. தயாளன், பொது நூலகப் பிரதம நூலகர் அனுசியா சிவகரன், யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் ஜெ. மயூரன், நூலக உத்தியோகஸ்தர்கள் மற்றும் வாசகர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.









விஜயின் தமிழகத் தேர்தல் வெற்றியும் இலங்கைத் தீவின் பிரதிபலிப்புகளும்..! 20 மணி நேரம் முன்
சூர்யாவின் திரை வாழ்க்கையில் இதுவரை நடக்காத விஷயம்.. தமிழக வசூலில் கருப்பு திரைப்படம் ருத்ரதாண்டவம் Cineulagam
சூர்யா சார் உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு.. கருப்பு ஹிட் ஆனதும் என்ன செய்திருக்கிறார் பாருங்க Cineulagam