யாழ்.மாநகர முதல்வர் வடக்கு மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை
தமிழரின் உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கான நினைவேந்தல் மிகவும் உணர்ச்சிபூர்வமாக நடத்தப்படவுள்ளது.
இதன்போது அனைத்து பொதுமக்களும் தங்கள் இல்லங்களுக்கு அருகாமையிலுள்ள துயிலும் இல்லங்களுக்கும் நினைவேந்தல் இடங்களுக்கும் சென்று நினைவேந்தல் நிகழ்வை மிகவும் உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என யாழ்ப்பாணம் மாநகர மேயர் வி.மணிவண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆலய நிர்வாகத்தினரிடம் வேண்டுகோள்

இன்று மதியத்துக்குப் பின்னர் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் செயற்பாடுகளை இடைநிறுத்தி நினைவேந்தலை எழுச்சியுடன் கடைப்பிடிக்க ஒத்துழைக்க வேண்டும்.
அத்துடன் மாலை 6.05 மணியளவில் தாயகத்தில் உள்ள ஆலயங்களில் மணியொலியை
எழுப்புமாறும் ஆலய நிர்வாகத்தினரிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம் என்றும்
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam