அரசியல் கைதிகளின் வழக்குகள் வரலாற்றில் ரெமடியாஸ் பெயரும் நிச்சியம் இடம்பெறும்: அருட்தந்தை மா.சக்திவேல்
அரசியல் கைதிகளின் வழக்குகள் வரலாற்றில் ரெமடியாஸ் பெயரும் நிச்சயம் இடம்பெறும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால் இன்று (15.02.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கைதிகள் விடுதலை
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரசியல் கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கையில் குறிப்பிட்ட ஒரு சில சட்டத்தரணிகளே செயல்படுகின்றார்கள்.
அந்த ஒரு சிலரில் ஒருவராக அகால மரணம் அடைந்து முனியப்பர் ரெமடியாஸ் தமது அரசியல் கொள்கைக்கு அப்பால் நின்று அரசியல் கைதிகளின் வழக்கு விடயத்தில் செயல்பட்டவர் என்ற வகையில் அரசியல் கைதிகளோடு சேர்ந்து அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு அன்னாரின் ஆத்ம சாந்தி அடைய பிரார்த்திப்பதோடு அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.
மறைந்த சட்டத்தரணி அவர்கள் அரசியல் கைதிகளின் வழக்கின் போது தனது வாதத் திறமையை வெளிக்காட்டி பலருடைய வழக்குகளில் தன்னை அடையாளப்படுத்தி உள்ளார்.
அரசியல் கைதிகளின் வழக்கு
அத்துடன் இவ் வழக்குகளின் போது இதனை தொழில் நிலையில் நின்று பார்க்காது மனிதநேயத்தோடு அரசியல் கைதிகளையும் அவர்களது குடும்ப உறவுகளையும் பார்த்து செயற்பட்டுள்ளார். இது அவருடைய மனிதநேயத்தை வெளிப்படுத்துகின்றது.
அரசியல் கைதிகளுடைய வழக்குகளை கையாளும் போது தனது கொள்கையை அரசியலை புறம் தள்ளிவிட்டு வழக்குகளில் வாதாடியமை அவரது உயர்ந்த உள்ளத்தை காட்டுகின்றது.
அரசியல் கைதிகளின் வழக்குகள் வரலாற்றில் இவரது பெயரும் நிச்சயம் இடம்பெறும்.
தமிழர்களின் தேசிய அரசியல் பாதுகாப்பிற்கு தொழிலுக்கு அப்பால் நின்று
செயல்படும் சட்டத்தரணிகள் தேவையான காலமிது என குறிப்பிடப்பட்டுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
