தவிசாளரிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட இளைஞருக்கு விளக்கமறியல்!
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாக பேசி, அவரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைதான இளைஞனை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். மேலதிக நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வலி. கிழக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட கட்டைப்பிராய் பகுதியில் சட்டவிரோத கட்டுமானம் ஒன்றினை இடித்து அகற்ற நீதிமன்று கட்டளையிட்டிருந்த நிலையில், கட்டடத்தை இடித்து அகற்றும் பணி முன்னெடுக்கப்பட்டது.
விளக்கமறியல்
இதனை பிரதேச சபை தவிசாளர் , செயலாளர் , பொலிஸார் , நீதிமன்ற உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்டவர்கள் மேற்பார்வை செய்து கொண்டிருந்த வேளையில், அவ்விடத்திற்கு வருகை தந்த இரு இளைஞர்களில் ஒருவர் தொலைபேசியில் காணொளி செய்ய, மற்றைய இளைஞன் தவிசாளரை அவதூறாக பேசி அநாகரிகமான முறையில் நடந்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து, அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த கோப்பாய் பொலிஸார் குறித்த இளைஞனை கைது செய்து, பொலிஸ் நிலையம் கொண்டு சென்றதுடன், தவிசாளரிடம் வாக்கு மூலம் பெற்ற பின்னர் , யாழ். மேலதிக நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
குறித்த வழக்கினை விசாரித்த நீதிபதி, இளைஞனை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam