சாமர சம்பத் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க (Chamara Sampath Dassanayake) எதிர்வரும் மே 19 ஆம் மாதம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 27 ஆம் திகதி 3 குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதான அவர் அன்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி (Tanuja Lakmali) முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது இரண்டு குற்றச்சாட்டுக்களுக்காக அவருக்கு பிணை வழங்கப்பட்டது. எனினும், மற்றுமொரு குற்றச்சாட்டுக்காக அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
விளக்கமறியல்
இந்தநிலையில், குறித்த வழக்கு இன்றையதினம் (5) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே பதுளை நீதவான் நுஜித் டி சில்வாவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பிலேயே அவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNELஇல் இணையுங்கள் JOIN NOW |

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri
