யாழில் மாற்றியமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்கள்
யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் வாக்களிப்பு நிலையங்களாக செயற்பட்ட 12 வாக்களிப்பு நிலையங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட செயலர் அறிவித்துள்ளார்.
ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியில் வேலணை மத்திய கல்லூரி விடுதி வாக்களிப்பு நிலையம் சரவணை பள்ளம்புலம் முருகமூர்த்தி ஆலய நால்வர் மணிமண்டபத்திற்கும் நாரந்தனை தெற்கு பொது நோக்கு மண்டப வாக்களிப்பு நிலையம் நாரந்தனை தெற்கு கிராம சக்தி பொது மண்டபத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியில் வடலியடைப்பு சைவப்பிரகாச வித்தியாலய மண்டப இல 1 வாக்களிப்பு நிலையம் வடலியடைப்பு சனசமூக நிலையத்திற்கும் அராலி வடக்கு அமெரிக்க மிஷன் பாடசாலை வாக்களிப்பு நிலையம் அராலி இந்துக்கல்லூரிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் வசாவிளான் மத்திய கல்லூரி மண்டப இல 2 வாக்களிப்பு நிலையம் பலாலி வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
மானிப்பாய் தொகுதியில் தாவடி இந்து தமிழ் கலவன் பாடசாலை மண்டப இல 1 வாக்களிப்பு நிலையம் தாவடி தெற்கு சனசமூக நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கணபதி கலாசார மண்டபம்
கோப்பாய் தொகுதியில் அச்சுவேலி மத்திய கல்லூரி மண்டப இல 2 வாக்களிப்பு நிலையம் அச்சுவேலி ஆரம்ப பாடசாலைக்கும், அச்சுவேலி விக்னேஸ்வரா சனசமூக நிலைய வாக்களிப்பு நிலையம் விக்னேஸ்வரா முன்பள்ளிக்கும் மாற்றப்பட்டுள்ளது.
உடுப்பிட்டி தொகுதியில் இமையாணன் மாந்தோட்ட சிவஞான வைரவர் ஆலய மண்டப வாக்களிப்பு நிலையம் உடுப்பிட்டி பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கும், கரணவாய் சக்கலாவத்தை பொது நோக்கு மண்டபத்தில் இயங்கிய வாக்களிப்பு நிலையம் கொற்றாவத்தை செட்டிதறை சித்தி விநாயகர் ஆலய கல்யாண மண்டபத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நல்லூர் தேர்தல் தொகுதியில் கொக்குவில் மேற்கு கிறிஸ்தவாலய தமிழ் கலவன் பாடசாலை மண்டப இல 1இல் இயங்கிய வாக்களிப்பு நிலையம் ஶ்ரீ வீரமா பிடாரி அம்பாள் ஆலய மண்டபத்திற்கும், நாவலர் கலாச்சார மண்டபத்தில் இயங்கிய வாக்களிப்பு நிலையம் அத்தியடி கணபதி கலாசார மண்டபத்திற்கும் மாற்றப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |