சர்வதேச விசாரணைக்கு அலி சப்ரி தயாரா: ரெலோ தரப்பில் பகிரங்க சவால்

Missing Persons Ali Sabry International Court of Justice
By Kajinthan Sep 01, 2024 07:56 PM GMT
Report

காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த சரியான கணக்குகளை வெளிக்கொண்டு வருவதற்காக சர்வதேச விசாரணைக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தயாரா என ரெலோவின் பேச்சாளர் கு. சுரேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 

"காணாமல் ஆக்கப்பட்டோர் எத்தனை பேர் என்ற வாய்க்கணக்குகளை சொல்வதை விடுத்து சர்வதேச விசாரணை நடத்துவதன் மூலமாகவே சரியான கணக்கினை அறிந்து கொள்ள முடியும்.

அப்பொழுதுதான் யார் பொய் சொல்லுகிறார்கள் யார் உண்மை சொல்லுகிறார்கள் என்பது வெளிவரும். அதை அனைவரும் ஏற்றுக் கொள்ளவும் முடியும்.

[YPT69B5

காணாமல் ஆக்கப்பட்டோர் 

அதை விடுத்து காலத்துக்கு காலம் வெளிவிவகார அமைச்சர்களாக வருபவர்கள் தங்கள் மனக்கணக்குகளின்படி காணாமல் ஆக்கப்பட்டோரின் எண்ணிக்கையை கூறுவது அபத்தமாகும்.

சர்வதேச விசாரணைக்கு அலி சப்ரி தயாரா: ரெலோ தரப்பில் பகிரங்க சவால் | Relo Speaker Bet Ali Sabry Missing Persons Issue

சர்வதேச பிரதிநிதிகளால் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம், காணாமல் ஆக்கப்பட்டு இருக்கலாம் என்று சனத்தொகை மதிப்பீட்டின் அடிப்படையில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த உண்மையை கண்டறிவது அரசினுடைய கடமை. அதற்கான நியாயபூர்வமான விசாரணையை நடத்துவதும் அரசின் கடமை. உள்ளூர் விசாரணைகளின் மூலம் நீ பொய் சொல்லுகிறாய், நான் பொய் சொல்லுகிறேன் என்று ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதனால் தான் சர்வதேச விசாரணை கோரப்படுகிறது.

சர்வதேச விசாரணையின் மூலமே சரியான தரவுகளையும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய எண்ணிக்கையும் அறிந்து கொள்ள முடியும்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பு மூதாட்டிக்கு நடந்த கொடுமை

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பு மூதாட்டிக்கு நடந்த கொடுமை

சர்வதேச விசாரணை 

இதனால் தான் நாம் சர்வதேச விசாரணையை கோருவதோடு ஐநா மனித உரிமை உயர்ஸ்தானிகரும் மனித உரிமை பேரவையும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நிற்கின்றனர்.

சர்வதேச விசாரணைக்கு அலி சப்ரி தயாரா: ரெலோ தரப்பில் பகிரங்க சவால் | Relo Speaker Bet Ali Sabry Missing Persons Issue

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியினுடைய கருத்தும் சர்வதேச விசாரணையை கோருவதே சாலச் சிறந்தது என்று தெளிவாக வெளிப்படுத்தி நிற்கிறது.

அவர் கூறும் எண்ணிக்கைகளை தமிழ் மக்களோ சர்வதேச பொறிமுறைகளோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதையும் வெளிவிவகார அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.

காலத்துக்கு காலம் வாய்க்கணக்குகளை வெளியிடுவதை விடுத்து இம்முறை ஐநா மனித உரிமைப் பேரவையில் எதிர்கொள்ள இருக்கும் பிரேரணைக்கு இணைய அனுசரணை வழங்கி சர்வதேச விசாரணை மூலமாக பொறுப்பு கூறல் வேண்டும். 

அத்துடன், நல்லிணக்கத்திற்கு அரசு தயாராக வேண்டுமே தவிர இந்த மாதிரியான கருத்துக்கள் எந்த முடிவுக்கும் இட்டுச் செல்லாது. சரியான கணக்குகளை அறிந்து கொள்ள அமைச்சர் அலி சப்ரி சர்வதேச விசாரணைக்கு தயாரா? என்பதற்கு அவர் பதில் கூற வேண்டும்" என தெரிவித்துள்ளார். 

வவுனியாவில் ரணிலுக்கு ஆதரவாக இடம்பெற்ற இரு பிரசாரப் பேரணிகள்

வவுனியாவில் ரணிலுக்கு ஆதரவாக இடம்பெற்ற இரு பிரசாரப் பேரணிகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US