பிரியந்தவின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட பெரும் தொகை நிதி! பாகிஸ்தான் பிரதமர் பாராட்டு
பாகிஸ்தானில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு நிவாரணம் மற்றும் மாதாந்தச் சம்பளம் வழங்கியமைக்கு அந்நாட்டு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை மேலாளர் பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு 100,000 அமெரிக்க டொலர் நிதியும் முதல் சம்பளம் 1667 அமெரிக்க டொலரும் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்த அறிவிப்பை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கட்சி PTI வெளியிட்டிருந்தது.
இந்நிலையிலேயே, நிவாரணம் மற்றும் மாதாந்த சம்பளத்தை வழங்கிய சியால்கோட் வர்த்தக சமூகத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் ஆரம்ப பகுதியில் பாகிஸ்தானில் பணி புரிந்து வந்த, இலங்கையரான பிரியந்த குமார அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்தார். அத்துடன், அவர் உயிருடன் எரிக்கப்பட்டிருந்தார்.
பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பொது முகாமையாளராக பிரியந்த குமார பணியாற்றினார். இந்நிலையில் குறித்த தொழிற்சாலையின் ஊழியர்களால் பிரியந்த குமார அடித்துக் கொல்லப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri