அதிகரிக்கும் நீர் மற்றும் மின்சார கட்டணங்கள்! பொதுமக்கள் தொடர்பில் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
மின்சாரக் கட்டணம் பெருமளவு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் மாற்று வழியை வழங்க வேண்டும் அல்லது பொது மக்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறுபவர்கள் தொடர்ச்சியான விலைவாசி உயர்வை சமாளிக்க முடியாது எனவும், நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வு மக்களுக்கு மேலும் ஒரு பாதிப்பாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உற்பத்தி மற்றும் செயற்பாட்டுச் செலவுகள் அதிகரிப்பதன் காரணமாக இலங்கை மின்சார சபை பாரிய நட்டத்தை எதிர்நோக்குவதாகக் கூறுவதாக அவர் குறிப்பிட்டார்.
பாரிய பாதிப்பினை எதிர்கொள்ளும் பொதுமக்கள்

எவ்வாறாயினும், விலைவாசியை மக்கள் கையாளக்கூடிய அளவு அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதிக மின் கட்டணத்தை செலுத்த முடியாத மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும். தற்போது நிலவும் பொருளாதாரச் சூழலால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே நீர் மற்றும் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு பதிலாக சில சலுகைகளை விரைவில் வழங்குமாறு அரசாங்கத்திற்கு முன்மொழிவதாகவும் அவர் தெரிவித்தார்.
குணசேகரனை ஆட்டிப்படைக்க மாஸ் என்ட்ரி கொடுத்த புதிய நபர், யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam