போசணைக் குறைப்பாடுள்ள குடும்பங்களுக்கு நிவாரணம்: வெளியாகியுள்ள தகவல்
போசணைக் குறைப்பாடுள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக நிதி,பொருளாதார நிலைபேறு, தேசிய கொள்கைத் திட்டமிடல் அமைச்சின் செயலாளர் கே.எம்.எம். சிறிவர்த்தன தெரிவித்துள்ளார்.
நிவாரணம்
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,“இலங்கையில் வாழும் போசணைக் குறைப்பாடுள்ள 61 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா பத்தாயிரம் ரூபா வீதம் நான்கு மாதங்களுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளது.
உலக உணவுத் திட்டம்
உலக உணவுத் திட்டம் குறித்த குடும்பங்களை தெரிவு செய்து நேரடியாக நிவாரணங்களை வழங்கும் செயற்பாட்டை மேற்கொள்ளவுள்ளது.
இம்மாதம் தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ள குறித்த நிவாரணத் திட்டத்தின் கீழ் செப்டம்பர், ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்த நிவாரணத் தொகை தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளது.”என கூறியுள்ளார்.