'டித்வா'வில் பாதிக்கப்பட்ட வீடுகள் : நட்டஈடு தொடர்பில் வெளிவந்த மாற்றங்கள்
பேரிடரால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் மதிப்பீடு இல்லாமல் 5 இலட்சம் ரூபா நிதி உதவி வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
கொபய்கனே பிரதேச செயலகத்தில் நடைபெற்ற “பிரஜா சக்தி விழிப்புணர்வு நிகழ்ச்சியில்” கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், அதன்படி, மதிப்பீடு இல்லாமல் இந்த பணம் செலுத்தப்படும்.
உடன் வழங்கப்படும் விதிமுறைகள்
முறையான மதிப்பீடு தேவையில்லாத குடும்பங்களுக்கு மிக விரைவில் இந்த பணம் விடுவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அமைச்சர் கூறினார்.
மேலும், பகுதியளவு சேதமடைந்த 120,000 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு முறையான மதிப்பீடுகளை நடத்த சுமார் ஒரு வருடம் ஆகலாம் என்பதால், நிவாரணம் வழங்குவதில் தாமதத்தைத் தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், ஐந்து இலட்சம் இழப்பீட்டை யாராவது பெற்றுக் கொள்ள விருப்பமில்லை என்றால், அவர்கள் முறையான மதிப்பீட்டைக் கோரலாம்.
அவர்கள் மதிப்பிடும் சேதத்தின் அளவைப் பொறுத்து இழப்பீட்டுத் தொகை பல மில்லியன் ரூபாயாக அதிகரிக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.