துரிதப்படுத்தப்பட வேண்டிய நிவாரண உதவிகள்.. வடக்கு மாகாண ஆளுநரின் வலியுறுத்தல்

Sri Lankan Peoples Sri Lanka Government Floods In Sri Lanka Flood Cyclone Ditwah
By Thevanthan Dec 23, 2025 06:58 AM GMT
Report

வெள்ளத்தில் தனது உடைமைகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்த ஒருவரால் அதிகாரிகளைத் தேடி அலுவலகங்களுக்கு அலைந்து திரிய முடியாது. எனவே, அதிகாரிகளே அந்த மக்களைத் தேடிச் சென்று விவரங்களைச் சேகரிக்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சிக்கனக் கடனுதவி கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனப் பிரதிநிதிகள், இயற்கைப் பேரிடரால் தமது சங்கம் எதிர்கொண்டிருக்கும் சவால்கள் குறித்து நேற்று(22.12.2025) மேற்கொண்ட கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பொருளாதாரத்திற்கு மாகாணங்கள் வழங்கிய பங்களிப்புகள்

தேசிய பொருளாதாரத்திற்கு மாகாணங்கள் வழங்கிய பங்களிப்புகள்

நிவாரண உதவிகள் 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 

பொதுமக்கள் தமது விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட தொழில் முயற்சிகளைப் பதிவு செய்வதில் காட்டும் அக்கறையின்மையே, அனர்த்தங்களின் போது அவர்களுக்குரிய நிவாரணங்கள் கிடைப்பதில் சிக்கல்களை ஏற்படுத்துகின்றது.

துரிதப்படுத்தப்பட வேண்டிய நிவாரண உதவிகள்.. வடக்கு மாகாண ஆளுநரின் வலியுறுத்தல் | Relief Aid For Natural Disasters In Sri Lanka

எமது மக்களிடம் ஒரு மிகப் பெரிய குறைபாடு உள்ளது. அவர்கள் விவசாயம், கால்நடை உள்ளிட்ட தங்கள் தொழில் முயற்சிகளை அரச கட்டமைப்புக்குள் பதிவு செய்வதில் போதிய அக்கறை காட்டுவதில்லை. இந்த அக்கறையின்மை, தற்போது ஏற்பட்டுள்ள இயற்கைப் பேரிடர் போன்ற சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தால் வழங்கப்படும் இழப்பீடுகள் மற்றும் நிவாரணங்களைப் பெற்றுக்கொள்வதில் அவர்களுக்குப் பாதகமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.

நடந்தவற்றை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, இப்போதாவது மக்கள் தங்கள் தொழில் முயற்சிகளை முறையாகப் பதிவு செய்ய வேண்டும். எமது அதிகாரிகள் பலர், ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற மனிதாபிமானப் பார்வையைக் கொண்டிருக்கவில்லை. “சுற்றறிக்கைகளில் இல்லைத்தானே, நாம் ஏன் உதவ வேண்டும்?”என்ற ரீதியிலேயே செயற்படுகிறார்கள். இதனால் தான் ஏழைகள் இன்னும் ஏழைகளாகவே இருக்கிறார்கள்.

துரிதப்படுத்தப்பட வேண்டிய நிவாரண உதவிகள்.. வடக்கு மாகாண ஆளுநரின் வலியுறுத்தல் | Relief Aid For Natural Disasters In Sri Lanka

அதிகாரிகள் களத்துக்கு செல்ல வேண்டும் 

மேலும்,  பாதிக்கப்பட்ட மக்கள் விவரம் தந்தால் பதிவு செய்வோம், தராவிட்டால் விட்டுவிடுவோம் என்று அலுவலகத்தில் இருந்து கொண்டு அதிகாரிகள் செயற்பட முடியாது. அழிவுகளைச் சந்தித்த மக்கள் அந்தத் துயர மனநிலையிலும், இழப்புக்கள் குறித்த கவலையிலும் தான் இருப்பார்கள்.

துரிதப்படுத்தப்பட வேண்டிய நிவாரண உதவிகள்.. வடக்கு மாகாண ஆளுநரின் வலியுறுத்தல் | Relief Aid For Natural Disasters In Sri Lanka

இதனைப் புரிந்து கொண்டு அதிகாரிகளே களத்துக்குச் சென்று தகவல்களைத் திரட்ட வேண்டும். இது குறித்துத் தகுந்த அறிவுறுத்தல்களை நான் வழங்கியுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். 

இந்த கலந்துரையாடலில் ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள் மற்றும் சம்மேளனங்களின் மாவட்டப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இலங்கைக்கு 450 மில்லியன் டொலர் உதவியை அறிவித்த இந்தியா

இலங்கைக்கு 450 மில்லியன் டொலர் உதவியை அறிவித்த இந்தியா

சண்டிலிப்பாய் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கதிரையால் கலவரம்!

சண்டிலிப்பாய் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கதிரையால் கலவரம்!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


Gallery
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France

24 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US