ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் செயலகத்துக்கான பணியாட்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
51வது யோசனை நிறைவேற்றத்தின்படி, இலங்கையின் மனித உரிமை மீறல்களை விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் செயலகத்துக்கான பணியாட்கள் மற்றும் அவர்களுக்கான கொடுப்பனவுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த திட்டத்துக்கான பணிப்பாளர் ஜோஹானஸ் ஹூய்ஸ்மேன், இது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் செயலாளர் ஹூய் லூவுக்கு எழுத்து மூலம் விளக்கமளித்துள்ளார்.
இதற்கமைய 16 பணியாட்களும் அவர்களுக்குரிய கொடுப்பனவுகளுக்கும் 6,092 மில்லியன் டொலர் தேவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாத காலப்பகுதிக்கு இந்த நிதிக்கோரப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி
மனித உரிமை மீறல்கள் தொடர்பான மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களுக்கான சாட்சிய திரட்டல், பகுப்பாய்வு என்பவற்றுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
பொருளாதார நெருக்கடி, நிதிமோசடிகள் போன்றவை தொடர்பான விடயங்களை கண்காணிக்கவும் இந்த நிதி கோரப்பட்டுள்ளது.
இதேவேளை தகவல் சேகரிப்புக்களுக்காக இரண்டு பணியாளர்கள், 2022ஆம் ஆண்டில் 5 நாட்களுக்கு ஐரோப்பாவுக்கு பயணம் மேற்கொள்வதற்கும், 2023ஆம் ஆண்டில் அவர்கள் ஐரோப்பாவில் 5நாட்களுக்கு பயணம் மேற்கொள்வதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
அதேநேரம் 3 பணியாளர்கள் இலங்கையின் கொழும்புக்கு சென்று தகவல்களை சேகரிப்பதற்காக 5 நாட்களுக்கான நிதி உள்ளடக்கப்பட்டுள்ளது.
மனித உரிமை நிலவர அறிக்கை
இதனை தவிர இலங்கையின் ஏனைய பகுதிகளில் தகவல்களை சேகரிக்க 7 நாட்களுக்கான நிதி கோரப்பட்டுள்ளது.
2024ம் ஆண்டு வட அமெரிக்காவில் தகவல் சேகரிப்பதற்காக இரண்டு பணியாளர்களுக்கு 5 நாட்களுக்கான பயணத்துக்கும், இலங்கைக்கு சென்று 5 நாட்களுக்கு இரண்டு பணியாளர்கள் தமது முழுமை மனித உரிமை நிலவர அறிக்கையை தயாரிப்பதற்கும் இந்த நிதி கோரப்பட்டுள்ளது.
இந்தநிலையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அடிப்படையில் கனடா அண்மையில் இலங்கையின் இரண்டு முன்னாள் ஜனாதிபதிக்கு விதிகளை தடைகளை போன்று, ஏனைய நாடுகளும் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது தடை விதிப்பதை தடுக்கமுடியாது என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் தரப்பை கோடிட்டு இலங்கையின் செய்தித்தாள் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 2 நாட்கள் முன்
![பிரபல இயக்குனரை வீட்டிற்கு சென்று சந்தித்த பிக்பாஸ் 8 நிகழ்ச்சி புகழ் விஷால்... யாரை பாருங்க](https://cdn.ibcstack.com/article/cb97d6f1-3bbb-4a1e-b07e-2da37a8e039c/25-67ac160a1010c-sm.webp)
பிரபல இயக்குனரை வீட்டிற்கு சென்று சந்தித்த பிக்பாஸ் 8 நிகழ்ச்சி புகழ் விஷால்... யாரை பாருங்க Cineulagam
![நடிகர் கார்த்தியின் மகன் கந்தனா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே?.. எங்கே சென்றுள்ளார் பாருங்க](https://cdn.ibcstack.com/article/b6b960dd-630d-4e70-b0a7-f029c87b0e63/25-67ab21be2ee71-sm.webp)
நடிகர் கார்த்தியின் மகன் கந்தனா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே?.. எங்கே சென்றுள்ளார் பாருங்க Cineulagam
![புலம்பெயர்ந்தோரை திரும்ப ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகளுக்கு விசா தடை... பிரித்தானியா அதிரடி](https://cdn.ibcstack.com/article/5c7d27e3-3419-4ade-a732-ccf4133689e9/25-67abdef89aeb0-sm.webp)
புலம்பெயர்ந்தோரை திரும்ப ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகளுக்கு விசா தடை... பிரித்தானியா அதிரடி News Lankasri
![புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு](https://cdn.ibcstack.com/article/6287e505-7107-449a-b1a8-76c95abee052/25-67ab40f0969e8-sm.webp)