பாடசாலைகளில் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பில் வெளியான தகவல்
பாடசாலைகளில் சுகாதார வழிகாட்டல்களை கடுமையாக பின்பற்ற தவறும் பட்சத்தில் மீண்டும் பாடசாலைகளை மூடக்கூடிய நிலை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது பாடசாலைகளில் அதிகமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக மாணவர்கள் மத்தியில் சில உப கொத்தணிகள் உருவாகியுள்ளன. இதன் காரணமாக பாடசாலைகளில் தொற்று பரவாத வகையில் சுகாதார வழிகாட்டல்களை கடுமையாக பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த பரவலை கட்டுப்படுத்துவதற்கான முழுமையான பொறுப்பினை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களே ஏற்க வேண்டும். அத்துடன் சுகாதார வழிகாட்டல்களை கடுமையாக பின்பற்றுமாறு பெற்றோர்கள், மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
உலகக்கிண்ணத்தில் விளையாட மறுக்கும் வங்காளதேசம்.,இணைந்த பாகிஸ்தான்? இலங்கைக்கு மாற்ற கூறும் வீரர் News Lankasri
எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan