மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து சேவைகள் தொடர்பில் வெளியான தகவல்
எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்திலும்,நவம்பர் முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையிலும் தொடருந்து சேவைகளை ஆரம்பிக்க கோவிட் தடுப்புச் செயலணி தீர்மானித்துள்ளது.
போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி (Pavithra Vanniyarachchi) இதனை தெரிவித்துள்ளார்.
கோவிட் பரவல் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக பயணிகள் தொடருந்து சேவைகள் இடை நிறுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில், சேவைகள் ஆரம்பிக்கப்படும் போது தொடருந்து பருவச்சீட்டுக்களை வைத்திருப்போருக்கு மாத்திரம் சேவைகளை நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தொடருந்து திணைக்கள தரப்பு தகவல்களின் படி பிரதான கடவையில் 50 தொடருந்துகளும், வடக்கு கடவையில் 6 தொடருந்துகளும், கரையோர கடவையில் 64 தொடருந்துகளும், களனிவெளி
கடவையில் 8 தொடருந்துகளும், புத்தளம் மார்க்கத்தில் 18 தொடருந்துகளும்
சேவைகளில் ஈடுபடவுள்ளன.





கூலி பட நடிகர் உபேந்திரா மற்றும் மனைவிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! கலக்கத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் Cineulagam

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam
