மாமாங்கம் கிராம சேவையாளர் பிரிவு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மாமாங்கம் கிராம சேவையாளர் பிரிவு இன்று மாலை முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக கொவிட் அதிகரித்துச்செல்லும் நிலையில் அதிகளவான தொற்றாளர்கள் மாமாங்கம் பகுதியில் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து கடந்த 20 தினங்களாக குறித்த பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் குறித்த பகுதியில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் குறைந்தளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் குறித்த பிரதேசத்தினை விடுவிப்பதற்கான பரிந்துரையினை தேசிய கொவிட் செயலணிக்கு மாவட்ட கொவிட் செயலணி வழங்கியுள்ளது.
இதனடிப்படையில் இன்று மாலை முதல் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மாமாங்கம் கிராம சேவையாளர் பிரிவு விடுவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் மாமாங்கம் பிரதேசம் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பிரதேசத்தில் அதிகளவானோர் வீதிகளில் குவிந்து நிற்பதை காணமுடிந்தது.
வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறு தொடர்ச்சியாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் அதனை மீறும் வகையில் சிலர் செயற்படுவதையும் காணமுடிகின்றது.














தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
