கல்மடு கிராம உத்தியோகத்தர் பிரிவு இன்று முதல் தனிமைப்படுத்தலிருந்து விடுவிப்பு
மட்டக்களப்பு -கோரளைப்பற்று, கல்மடு கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள மருதநகர் கிராமம் கடந்த 19.05.2021 ஆந் திகதி முதல் மாவட்ட கோவிட் தடுப்பு செயலணியின் தீர்மானத்திற்கு அமைவாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று 05.06.2021 ஆந் திகதி முதல் குறித்த கிராம உத்தியோகத்தர் பிரிவு விடுவிக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட கோவிட் தடுப்பு செயலணியின் தலைவருமாகிய கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.
மாவட்ட கோவிட் தடுப்பு செயலணியினால் இன்று 05.06.2021 சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தீர்மாணத்திற்கு அமைவாகவே குறித்த பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவித்திருந்தார்.
இதேவேளை,மட்டக்களப்பு - ஏறாவூர் நகர் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஏறாவூர் - 02 கிராம உத்தியோகத்தர் பிரிவானது இன்று 05.06.2021 ஆந் திகதி முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri